இயல்பு
உள்ளத்தை தொலைத்துவிட்டு உன்னை
நீ தேடிக்கொண்டிருக்கிறாய்...
உன்மத்தம் பிடித்த நிலையில்
உயர்ந்து நின்றாய் உனக்குள்...
சிறு புள்ளியாய் தேய்ந்து நிற்கிறாய்
இன்று வேறோரிடத்தில்..
சிறியதாய் வளர்ந்த ஆலமரத்தின்
ஆணி வேரை வெட்டியெரியப்பார்க்கிறாய்...
இயல்பாய் அதனை அதன் போக்கில்வளரவிடு...
உன்னைத்தொலைத்து உனக்கென
வாழ முற்படுகிறாய்..
உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியை கூட
அன்பென கொண்டாட நினைக்கிறாய்..
உன் இயல்பை ஏற்றுக்கொள்ள
யாராலும் முடியாது..
(யாரையும் யாராலும்தான்)....
சிறு பிள்ளையாய் திரிந்ததால்
சிறுபிள்ளையொடு ஊடல் கொள்கிறாய்
ஆனால் உணர்வோடு வாழ
ஆசை படுகிறாய்.
உன் காமத்தை போல்
கோபம், அழுகை,சிரிப்பு எல்லாம் இயல்பானதே
யாருக்காகவும் உன்னை மாற்ற நினைத்து
மேலும் மூர்க்கமாகிவிடாதே.....
சிலேட்டுக்குச்சி[பல்பம்]
Saturday, December 18, 2010
Tuesday, June 22, 2010
ப்ரிய சுவாசம்
மூர்கமாய் முத்தம் இடும் நேரம்
முத்தத்தின் இடைவெளியில்
மூச்சுக்காற்று இடம் மாறுமா...?
மாறி இருக்க கூடும்..
மாறமலா மனசுக்குளேயே இருக்கிறாய்..
உனக்குள் இன்னும் இருக்கிறதா என்பது
எனக்கு தெரியாது..
சுலபமாய் வேற்றுகிரகவாசியாகி
அங்குசுவாசிக்க தொடங்கிவிட்டாய்...
மூர்க்கமாய் முத்தம் இட்டதாய்
இருந்தால் என்ன ..
முள் நீக்கி நீ கொடுத்த மீனாய்
இருந்தால் என்ன..
இரண்டிலும் உன் பிரியம் இருந்தது..
மூர்கமாய் முத்தம் இடும் நேரம்
முத்தத்தின் இடைவெளியில்
மூச்சுக்காற்று இடம் மாறுமா...?
மாறி இருக்க கூடும்..
மாறமலா மனசுக்குளேயே இருக்கிறாய்..
உனக்குள் இன்னும் இருக்கிறதா என்பது
எனக்கு தெரியாது..
சுலபமாய் வேற்றுகிரகவாசியாகி
அங்குசுவாசிக்க தொடங்கிவிட்டாய்...
மூர்க்கமாய் முத்தம் இட்டதாய்
இருந்தால் என்ன ..
முள் நீக்கி நீ கொடுத்த மீனாய்
இருந்தால் என்ன..
இரண்டிலும் உன் பிரியம் இருந்தது..
Tuesday, February 2, 2010
மழை
மாலை நேரத்தில் பெய்யும்
மழையை நீ
ரசித்திருக்கலாம்,
உண்ண கொஞ்சம் காரம்
சூடான தே-நீர்
படிக்க நல்ல புத்தகம்
என் நினைவுகள்,
இதில் யெதெனும் ஒன்றுடன்....,
அதிகாலை 3 மணிக்கு
பெய்யும் அடை மழையை
ரசித்திருக்கிறாயா?
காதலியை காமுறும்
காதலன் போல்
வானுக்கும் பூமிக்கும்
இடைவெளி இல்லாது....,
நான் ரசித்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்..
மாலை நேரத்தில் பெய்யும்
மழையை நீ
ரசித்திருக்கலாம்,
உண்ண கொஞ்சம் காரம்
சூடான தே-நீர்
படிக்க நல்ல புத்தகம்
என் நினைவுகள்,
இதில் யெதெனும் ஒன்றுடன்....,
அதிகாலை 3 மணிக்கு
பெய்யும் அடை மழையை
ரசித்திருக்கிறாயா?
காதலியை காமுறும்
காதலன் போல்
வானுக்கும் பூமிக்கும்
இடைவெளி இல்லாது....,
நான் ரசித்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு மட்டும்..
Friday, December 4, 2009
உயிர்மெய்
அவள் கடைசியாக கொடுத்த
முத்தத்தில் கொஞ்சம் நிறைய
ஆழமாக ஊடுருவும்
காதல் இருந்தது,
ஆழமாக ஊடுருவும்
கண்களில் கொஞ்சம் நிறைய
இதழின் ஓரத்தில்
கண்ணீர் இருந்தது,
இதழின் ஓரத்தில்
வெடித்துவிட கொஞ்சம் நிறைய
அழுகை இருந்தது,
ஈறு தெரியும் சிரிப்பை
பார்க்க கொஞ்சம் நிறைய
ஆசை இருந்தது.
உள்ளம் உருகும் பாடலொன்று
பாட கொஞ்சம் நிறைய
ஆவல் இருந்தது,
ஊரரிய அவளுடன் ஒன்றாக
சுற்ற கொஞ்சம் நிறய
நெஞ்சம் இருந்தது,
என்னவள் என்னவளென்று கத்தி
கூற கொஞ்சம் நிறைய
மனதும் இருந்தது,
ஏதும் கேட்காமல் வா என்னோடென்று
அழைக்க கொஞ்சம் நிறைய
தைரியம் இருந்தது,
ஒன்றாய் கடைசிவரை சேர்ந்து
வாழ கொஞ்சம் நிறைய
ஊயிர் இருந்தது,
ஓரமாய் இருந்து அவள் வாழ்வதை
காணமட்டுமே கொஞ்சம் நிறைய
வாய்ப்பு இருந்தது,
அஃதே உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதவே "கொஞ்சமும் நிறைவேறாத"
ஆசை காதல்" மட்டும் இருகிறது...
Wednesday, December 2, 2009
வலி
மீட்டெடுக்க இயலாத இழப்புகளை
விதைத்துக் கொண்டேயிருக்கிறது
இந்த வாழ்க்கை,
நானும் சலனமில்லாமல் அறுவடை
செய்து கொண்டேயிருக்கிறேன்
அதன் வலிகளை,
வாழ்வினுடான உரையாடல் என்னுள்ளே
நீண்டு கொண்டேயிருக்கிறது
பால்ய நினைவுகளுடன்,
அம்மாவிடம் ஆரம்பித்த காதல்
அப்பாவிடம் எதிர்த்த ஹீரோயிசம்
காதலியிடம் போட்ட சண்டை
நண்பனுக்கு கொடுத்த கடன்
எல்லாம் தோல்வியில் முடிந்தாலும்
வலித்ததேயில்லை,
ஆனால் வலிக்கிறது ..
இழப்புகளின் மீட்பின்மை.
மீட்டெடுக்க இயலாத இழப்புகளை
விதைத்துக் கொண்டேயிருக்கிறது
இந்த வாழ்க்கை,
நானும் சலனமில்லாமல் அறுவடை
செய்து கொண்டேயிருக்கிறேன்
அதன் வலிகளை,
வாழ்வினுடான உரையாடல் என்னுள்ளே
நீண்டு கொண்டேயிருக்கிறது
பால்ய நினைவுகளுடன்,
அம்மாவிடம் ஆரம்பித்த காதல்
அப்பாவிடம் எதிர்த்த ஹீரோயிசம்
காதலியிடம் போட்ட சண்டை
நண்பனுக்கு கொடுத்த கடன்
எல்லாம் தோல்வியில் முடிந்தாலும்
வலித்ததேயில்லை,
ஆனால் வலிக்கிறது ..
இழப்புகளின் மீட்பின்மை.
Tuesday, July 1, 2008
உறவுகள்
என் "முதல் அனுபவத்தை" எழுதும் முன்னாடியே ஒரு சின்ன அனுபவம்....நானும் ரொம்ப யோசிச்சு ஏதோ பெரிய நாவல் எழுதும் முஸ்தீபுகளுடன் கணிணீ முன்னால் உட்கார்ந்துக்கிட்டு, தொலைப்பேசியில் சந்தேகங்களை கேட்டுக்கிட்டு, இதுல குறிப்புகள் எழுதிக்கொள்ள குறிப்பேடு, பேனா வேற,... யோசிச்ச விசயங்கள் மறந்துறகூடாதுல....!
புதிதாய் இறக்குமதி {அதாங்க டவுன்லோடு} செய்த 'அழகி' தமிழ் மென்பொருளில் {இது சாப்ட்வேர்னு எல்லோருக்கும் தெரியும்} தட்டச்சுல தடுமாறி தட்டிக்கிட்டு .... 'க'விலிருந்து "கொ" "கோ"வை கொண்டு வரும் முயற்சியில் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் போது.....
பின்னாலிருந்து .......
."அப்பா .. வர்ரியா கேரம்' ஆடலாம்" என் எட்டு வயது மகன் 'நந்து'
நான் மனசுகுள்ளேயே
"எதுக்கு இந்த ப்ள்ளிக்கூடமெல்லாம் சனி, ஞாயிறெல்லாம் விடுமுறை விடுறாங்கனே தெரியல...!ச்சே...'
திரும்பி பாக்காம
" அப்பா முக்கியமான வேலையா இருக்கேன்..அப்புறமா விளையாடலாம் 'கண்ணா'...".
அவன் என்னை சுத்தி பாத்துட்டு ,,,
பின்னாலிருந்து முறைத்துக்கொண்டே அவன் அம்மாவிடம்...
"அம்மா"' நானாவது உருப்படியா ஏதாவது கேம்ஸ் விளையாடுவேன் ..இந்த அப்பாவ' பாரு ஏதோ லொட்டு... லொட்டுனு.. தட்டி கம்ப்யூட்டர' உடைச்சுக்கிட்டு இருக்காரு....".
அதற்கு உள்ளிருந்து ஒரு அசரிரீ"
ஆமாண்டா அவருக்கு வேற வேலையேயில்ல... நீ வெளிய போய் விளையாடு...".
நான் உள்ளுக்குள்
'பொறுங்கடா' என் எழுத்த வலைப்பூவுல பதிஞ்சுட்டு நான் யாருனு காட்றேன்..!!!!!ம்ம்ம்ம்" என்று கறுவியவாறு மீண்டும் "கொ" கோ"வை தேட ஆரம்பித்தேன்... .
கொஞ்ச நேரத்துலேயே பின்னாலிருந்து
"ஏங்க மதியானத்துக்கு சாப்பிட என்ன பண்ணட்டும்"
நான்;திரும்பாமலே}.. ஏதாவது இருக்குறத வச்சு பண்ணு போ'... .
மனைவி;அதான் என்ன.... பண்ணட்டும்... .
நான்;ம்ம்ம்ம்... இதெல்லாம் எங்கிட்ட கேட்கணுமா ... உனக்கு புடிச்சத ஏதாவது பண்ணு.... .
அவள்:ஏதாவது பண்றதுக்கு .. எதுக்கு உங்ககிட்ட கேட்கணும், இன்னைக்கு வெறும் தயிர் சோறுதான்... {சத்தமாக பையனிடம்} டேய்.. ! உனக்கு வெறும்'நூடுல்ஸ்"தான்... நான் போய் தூங்குறேன்...
அப்பாடா...!
இனி நிம்மதியா நம்ம வேலைய தொடரலாம்னு............... தொடர்ந்தேன்......................... .
{வெளியில் நந்து ' பந்தை சுவற்றில் டென்னிஸ் மட்டையால் அடிக்கும் சத்தம்....... .பின் , மனைவியின் கைப்பேசியில் அழைப்புமணி ஒலியை தொடர்ந்து யாருடனோ மெல்லியதாய் உரையாடும் சத்தம்... . சிறிது நேரத்தில் நந்து தொலைக்காட்சியில் கார்டூன்' போகோ' என மாற்றி மாற்றி .. பார்க்கும் சத்தம்.. .}
இப்படி பின்னால் மெதுவாக கேட்டுக்கொண்டிருந்தாலும் .. .நான் மும்முரமாக எனக்கான கணக்கை 'ஃபளாகர்ரில்" துவக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.....
.கொஞ்ச நேரந்தாங்க.......!! .என் முன்னால வந்து நின்னா..... மனைவி;அம்மா ஃபோன் பண்ணாங்க...
நான்;ம்....
அவள்;அம்மா அடுத்த வாரம் 'மதுரை' வர்ராங்களாம்.... .
நான்;{மறுபடியும்} ம்.... .
அவள்; எங்க அய்யாப்பா வழியில ஒரு விஷேசம்.. என ஆரம்பித்து ... ஒரு பத்து நிமிஷமாவது பேசிக்கிட்டிருந்தா..... .
நான்:ம்... ம்... ம்.... ம்.. ம்...,
என்று கணிணீயையே பார்த்துக்கொண்டிருக்க....
அவள்;{கோபமாக} இப்படியே பண்ணுங்க.. எப்போ வீட்டுக்கு வந்தாலும் , ஒன்ணு டீ.வி. பாப்பீங்க, இல்ல செல்போன்'ல ஒரு மணி நேரம் யார்கிட்டயாவது அரட்டை, இப்போ கம்ப்யூட்டரு..."" வீட்டுக்குள்ள உங்கக்கிட்ட பேசணும்னாகூட செல்போன்லதான் பேசணும்போல, நேர்ல நின்னா கண்ணு தெரியல உங்களுக்கு...ம்.. பேசாம இந்த எலக்ட்'ரானிக்ஸ் ஐட்டத்துக்கெல்லாம் 'தாலி"ய கட்டிருக்கலாம்ல... . ஒரு வீட்டுக்குள்ள மூணே பேரு ஆனா.... பேச நேரம்மில்ல..ச்சே.... .
தொலைக்காட்சி பாத்துக்கிட்டிருந்த என் பையனிடம்..
"என்னமோ பண்ணுங்கடா"..
நான்:.....!!!!!!!!!!!!!!!!!!
வீடு ரொம்ப நேரம் ஒரு கேவலமான அமைதியோடு இருந்துச்சு"
என்னதான் சொல்லுங்க இன்னைக்கு விஞ்ஞானம் வள்ர்ந்து ' தொலைக்காட்சில உலக செய்திகள் நேரடியா வந்தாலும், கைப்பேசியில் குறுந்த்தகவல்கள் உலகமெல்லாம் போனாலும், கணிணீயில் வலைதளம் சொடுக்கும் நேரத்தில் மிக சுலபமாய் 'முகம் தெரியாத நட்புறவுகளை வீட்டுக்குள் அழைத்து வந்தாலும்....". இவையெல்லாம் நம் வீட்டுக்குள் 'நம்' உறவுகளை பல நேரங்களில் பிரிச்சுப்போட்டுதான் வச்சிருக்கு.... வெறும் வானொலி மட்டும் இருந்த காலத்தில் ஞாயிற்றுகிழமைகளில் மதியம் உணவு முடித்து மூணு ம்ணியிலிருந்து நான்கு மணி வரை நான். என் அப்பா. அம்மா, மற்றும் என் சகோதரிகள் உட்கார்ந்தும் , படுத்துக்கொண்டும் கேட்ட 'வானொலி நாடகம்" கேட்ட சுகம் .. . இப்போ நினைச்சாலும் ' கண்ணுல நீர் நிறைஞ்சுருது........!
'விஞ்ஞானத்தால் உலகம் சுருங்குதலும், வணிகம் உலகமயமாதலும்' .... . நம்மை' நம் உறவுகளைபிரித்தாளுவதும், வணிகத்தால் நம்மை சுரண்டி கொண்டிருக்கும் 'மாயவலையில்' சிக்கிட்டோம், இதிலிருந்து இனி வெளிவருதல் என்பது சாத்தியமில்லை...!சுலபமும் இல்லை..... முடிந்தவரை நம்மிலிருந்து நாம் வெளி வருவோம் ' நம் தலமுறைக்காவது உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவோம்'
அட பாருங்க இதச்சொல்றதுக்கும் இந்த 'வலை' தேவையாயிருக்கு....
"அனுபவங்கள் தொடரும்

Saturday, June 28, 2008
முதல் அனுபவம்
"முதல் அனுபவம்"
வலைப்பூவில் என் முதல் எழுத்து எனது அனுபவம் குறித்ததாக இருக்கட்டுமேனு நினைச்சேன், அதிலும் அது என் "முதல் அனுபவமாக" இருந்தால் பதிவில் ஒரு சுவாரஸ்யமாக இருக்குமேனு தோணுச்சு..
வலைத்தளத்தில் முதலில் எழுதுறேன்னு சொன்னதால இதுக்கு முன்னாடியே எனது முதல் அனுபவத்தை வேறு எதிலும் எழுதிருப்பேன்னு நினைக்காதீங்க என்னோட எழுத்து "கன்னி எழுத்து, அதான் "சிலேட்டுக்குச்சி".. இதுதான் ஆ'ரம்பம்....
எல்லோருக்கும் "முதல் அனுபவம்".......!~ஒவ்வொரு வகையான பயத்துடனும், அறியாமையிலும், அடுத்து என்ன என்று அறியும் ஆவலிலும், சந்தோஷத்தில என்ன பண்றோம்னு தெரியாம தப்புத்தப்பா ஏதாவது பண்ணி முழுமையன இன்பமானு தெரியாம....? அது என்னனு சொல்ல முடியாதுல ... அதுதான் எனக்கும் நடந்துச்சு..
இருந்தாலும் ஒரு விஷயம் நடக்க போகுதுன்னு எதிர்பார்த்து காத்திருக்கப்ப ஒரு பதஷ்டம் இருக்குமே , அதை விவரிக்க வார்தைகளே கிடையாது....அதே மன நிலைதான் எனக்கும்..
'எப்படி ஆரம்பிக்கிறது'
'என்னென்ன ப்ண்ணனும்''
படிப்படியான விஷயங்கள்'
'எது முதலில், நடுவில், அப்புறம் முடிவில்'
"எதிர்வினை' எப்படி இருக்கும்"
அது ஒரு நீளமான பட்டியல் கொண்டது......
ஆனாலும் ஒரு முன் அனுபவம் உள்ள ஒருத்தர்கிட்ட நாம கேட்டுக்கோவும்ல....!நானும் கேட்டுக்கிட்டேன்
"பாபுண்ணா" அப்படினு செல்லமா என் நட்பு வட்டாரத்தில் அழைக்கப்படும் அவருக்கு 'இதுல' முன் அனுபவம் ஜாஸ்த்தி, நானும் அவர்கிட்டதான் முழுசா கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.......
..[என்ன அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகாத 46 வயசு கட்ட பிரம்மச்சாரி....] அத விடுங்க அது நமக்கு முக்கியமில்ல......
.ஆனா ரொம்ப பொறுமையா எல்லா விளக்கங்களும் சொல்லுவார் .... நடுவுல சந்தேகம் வந்தா தொலைப்பேசியிலும் அவரை தொல்லை பண்ணி கேட்டுதான் எனக்கு இது சாத்தியமாச்சு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
.அப்புறம் இன்னொரு விஷயம் 'பாபுண்ணா வற்புறுத்தலால்தான் இத்தன நாளா இருந்த தயக்கத்த விட்டுட்டு தைரியமா இறங்கினேன்..... முதல் அனுபவமும் சாத்தியமாச்சு... என எதிர்வினைதான் எப்படி இருக்கும்னு தெரியல?
அட...! இந்த வலைப்பூல எழுதுன "முதல் அனுபவம்" அததாங்க சொல்றேன்....
என்னதான் இருந்தாலும் வலைதளத்தில் நம்ம எழுத்த பாக்குறது " காதலியிடம் ஐஸ்கீரிம் கடையில் வாங்கிய முதல் முத்தத்தை போல் புது அனுபவம்தாங்க"...
முதல் அனுபவங்கள் தொடரும்......

Subscribe to:
Posts (Atom)