என் "முதல் அனுபவத்தை" எழுதும் முன்னாடியே ஒரு சின்ன அனுபவம்....நானும் ரொம்ப யோசிச்சு ஏதோ பெரிய நாவல் எழுதும் முஸ்தீபுகளுடன் கணிணீ முன்னால் உட்கார்ந்துக்கிட்டு, தொலைப்பேசியில் சந்தேகங்களை கேட்டுக்கிட்டு, இதுல குறிப்புகள் எழுதிக்கொள்ள குறிப்பேடு, பேனா வேற,... யோசிச்ச விசயங்கள் மறந்துறகூடாதுல....!
புதிதாய் இறக்குமதி {அதாங்க டவுன்லோடு} செய்த 'அழகி' தமிழ் மென்பொருளில் {இது சாப்ட்வேர்னு எல்லோருக்கும் தெரியும்} தட்டச்சுல தடுமாறி தட்டிக்கிட்டு .... 'க'விலிருந்து "கொ" "கோ"வை கொண்டு வரும் முயற்சியில் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் போது.....
பின்னாலிருந்து .......
."அப்பா .. வர்ரியா கேரம்' ஆடலாம்" என் எட்டு வயது மகன் 'நந்து'
நான் மனசுகுள்ளேயே
"எதுக்கு இந்த ப்ள்ளிக்கூடமெல்லாம் சனி, ஞாயிறெல்லாம் விடுமுறை விடுறாங்கனே தெரியல...!ச்சே...'
திரும்பி பாக்காம
" அப்பா முக்கியமான வேலையா இருக்கேன்..அப்புறமா விளையாடலாம் 'கண்ணா'...".
அவன் என்னை சுத்தி பாத்துட்டு ,,,
பின்னாலிருந்து முறைத்துக்கொண்டே அவன் அம்மாவிடம்...
"அம்மா"' நானாவது உருப்படியா ஏதாவது கேம்ஸ் விளையாடுவேன் ..இந்த அப்பாவ' பாரு ஏதோ லொட்டு... லொட்டுனு.. தட்டி கம்ப்யூட்டர' உடைச்சுக்கிட்டு இருக்காரு....".
அதற்கு உள்ளிருந்து ஒரு அசரிரீ"
ஆமாண்டா அவருக்கு வேற வேலையேயில்ல... நீ வெளிய போய் விளையாடு...".
நான் உள்ளுக்குள்
'பொறுங்கடா' என் எழுத்த வலைப்பூவுல பதிஞ்சுட்டு நான் யாருனு காட்றேன்..!!!!!ம்ம்ம்ம்" என்று கறுவியவாறு மீண்டும் "கொ" கோ"வை தேட ஆரம்பித்தேன்... .
கொஞ்ச நேரத்துலேயே பின்னாலிருந்து
"ஏங்க மதியானத்துக்கு சாப்பிட என்ன பண்ணட்டும்"
நான்;திரும்பாமலே}.. ஏதாவது இருக்குறத வச்சு பண்ணு போ'... .
மனைவி;அதான் என்ன.... பண்ணட்டும்... .
நான்;ம்ம்ம்ம்... இதெல்லாம் எங்கிட்ட கேட்கணுமா ... உனக்கு புடிச்சத ஏதாவது பண்ணு.... .
அவள்:ஏதாவது பண்றதுக்கு .. எதுக்கு உங்ககிட்ட கேட்கணும், இன்னைக்கு வெறும் தயிர் சோறுதான்... {சத்தமாக பையனிடம்} டேய்.. ! உனக்கு வெறும்'நூடுல்ஸ்"தான்... நான் போய் தூங்குறேன்...
அப்பாடா...!
இனி நிம்மதியா நம்ம வேலைய தொடரலாம்னு............... தொடர்ந்தேன்......................... .
{வெளியில் நந்து ' பந்தை சுவற்றில் டென்னிஸ் மட்டையால் அடிக்கும் சத்தம்....... .பின் , மனைவியின் கைப்பேசியில் அழைப்புமணி ஒலியை தொடர்ந்து யாருடனோ மெல்லியதாய் உரையாடும் சத்தம்... . சிறிது நேரத்தில் நந்து தொலைக்காட்சியில் கார்டூன்' போகோ' என மாற்றி மாற்றி .. பார்க்கும் சத்தம்.. .}
இப்படி பின்னால் மெதுவாக கேட்டுக்கொண்டிருந்தாலும் .. .நான் மும்முரமாக எனக்கான கணக்கை 'ஃபளாகர்ரில்" துவக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.....
.கொஞ்ச நேரந்தாங்க.......!! .என் முன்னால வந்து நின்னா..... மனைவி;அம்மா ஃபோன் பண்ணாங்க...
நான்;ம்....
அவள்;அம்மா அடுத்த வாரம் 'மதுரை' வர்ராங்களாம்.... .
நான்;{மறுபடியும்} ம்.... .
அவள்; எங்க அய்யாப்பா வழியில ஒரு விஷேசம்.. என ஆரம்பித்து ... ஒரு பத்து நிமிஷமாவது பேசிக்கிட்டிருந்தா..... .
நான்:ம்... ம்... ம்.... ம்.. ம்...,
என்று கணிணீயையே பார்த்துக்கொண்டிருக்க....
அவள்;{கோபமாக} இப்படியே பண்ணுங்க.. எப்போ வீட்டுக்கு வந்தாலும் , ஒன்ணு டீ.வி. பாப்பீங்க, இல்ல செல்போன்'ல ஒரு மணி நேரம் யார்கிட்டயாவது அரட்டை, இப்போ கம்ப்யூட்டரு..."" வீட்டுக்குள்ள உங்கக்கிட்ட பேசணும்னாகூட செல்போன்லதான் பேசணும்போல, நேர்ல நின்னா கண்ணு தெரியல உங்களுக்கு...ம்.. பேசாம இந்த எலக்ட்'ரானிக்ஸ் ஐட்டத்துக்கெல்லாம் 'தாலி"ய கட்டிருக்கலாம்ல... . ஒரு வீட்டுக்குள்ள மூணே பேரு ஆனா.... பேச நேரம்மில்ல..ச்சே.... .
தொலைக்காட்சி பாத்துக்கிட்டிருந்த என் பையனிடம்..
"என்னமோ பண்ணுங்கடா"..
நான்:.....!!!!!!!!!!!!!!!!!!
வீடு ரொம்ப நேரம் ஒரு கேவலமான அமைதியோடு இருந்துச்சு"
என்னதான் சொல்லுங்க இன்னைக்கு விஞ்ஞானம் வள்ர்ந்து ' தொலைக்காட்சில உலக செய்திகள் நேரடியா வந்தாலும், கைப்பேசியில் குறுந்த்தகவல்கள் உலகமெல்லாம் போனாலும், கணிணீயில் வலைதளம் சொடுக்கும் நேரத்தில் மிக சுலபமாய் 'முகம் தெரியாத நட்புறவுகளை வீட்டுக்குள் அழைத்து வந்தாலும்....". இவையெல்லாம் நம் வீட்டுக்குள் 'நம்' உறவுகளை பல நேரங்களில் பிரிச்சுப்போட்டுதான் வச்சிருக்கு.... வெறும் வானொலி மட்டும் இருந்த காலத்தில் ஞாயிற்றுகிழமைகளில் மதியம் உணவு முடித்து மூணு ம்ணியிலிருந்து நான்கு மணி வரை நான். என் அப்பா. அம்மா, மற்றும் என் சகோதரிகள் உட்கார்ந்தும் , படுத்துக்கொண்டும் கேட்ட 'வானொலி நாடகம்" கேட்ட சுகம் .. . இப்போ நினைச்சாலும் ' கண்ணுல நீர் நிறைஞ்சுருது........!
'விஞ்ஞானத்தால் உலகம் சுருங்குதலும், வணிகம் உலகமயமாதலும்' .... . நம்மை' நம் உறவுகளைபிரித்தாளுவதும், வணிகத்தால் நம்மை சுரண்டி கொண்டிருக்கும் 'மாயவலையில்' சிக்கிட்டோம், இதிலிருந்து இனி வெளிவருதல் என்பது சாத்தியமில்லை...!சுலபமும் இல்லை..... முடிந்தவரை நம்மிலிருந்து நாம் வெளி வருவோம் ' நம் தலமுறைக்காவது உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவோம்'
அட பாருங்க இதச்சொல்றதுக்கும் இந்த 'வலை' தேவையாயிருக்கு....
"அனுபவங்கள் தொடரும்