Friday, December 4, 2009

      உயிர்மெய்

வள் கடைசியாக கொடுத்த
முத்தத்தில் கொஞ்சம் நிறைய
காதல் இருந்தது,

ழமாக ஊடுருவும்
கண்களில் கொஞ்சம் நிறைய
கண்ணீர் இருந்தது,

தழின் ஓரத்தில்
வெடித்துவிட கொஞ்சம் நிறைய
அழுகை இருந்தது,

 
று தெரியும் சிரிப்பை
பார்க்க கொஞ்சம் நிறைய
ஆசை இருந்தது.

 
ள்ளம் உருகும் பாடலொன்று
பாட கொஞ்சம் நிறைய
ஆவல் இருந்தது,

 
ரரிய அவளுடன் ஒன்றாக
சுற்ற கொஞ்சம் நிறய
நெஞ்சம் இருந்தது,

 
ன்னவள் என்னவளென்று கத்தி
கூற கொஞ்சம் நிறைய
மனதும் இருந்தது,

 
தும் கேட்காமல் வா என்னோடென்று
அழைக்க கொஞ்சம் நிறைய
தைரியம் இருந்தது,

ன்றாய் கடைசிவரை சேர்ந்து
வாழ கொஞ்சம் நிறைய
ஊயிர் இருந்தது,

 
ரமாய் இருந்து அவள் வாழ்வதை
காணமட்டுமே கொஞ்சம் நிறைய
வாய்ப்பு இருந்தது,

 
தே உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதவே "கொஞ்சமும் நிறைவேறாத"
ஆசை காதல்" மட்டும் இருகிறது...











































































































































































Wednesday, December 2, 2009

வலி

மீட்டெடுக்க இயலாத இழப்புகளை
விதைத்துக் கொண்டேயிருக்கிறது
இந்த வாழ்க்கை,

நானும் சலனமில்லாமல் அறுவடை
செய்து கொண்டேயிருக்கிறேன்
அதன் வலிகளை,

வாழ்வினுடான உரையாடல் என்னுள்ளே
நீண்டு கொண்டேயிருக்கிறது
பால்ய நினைவுகளுடன்,

அம்மாவிடம் ஆரம்பித்த காதல்
அப்பாவிடம் எதிர்த்த ஹீரோயிசம்
காதலியிடம் போட்ட சண்டை
நண்பனுக்கு கொடுத்த கடன்
எல்லாம் தோல்வியில் முடிந்தாலும்
வலித்ததேயில்லை,

ஆனால் வலிக்கிறது ..

இழப்புகளின் மீட்பின்மை.